This is the film that will make the discard

இந்திய சினிமா வரலாற்றின் வசூல் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் படம் பாகுபலி 2. அந்தளவுக்கு நாளுக்குநாள் இந்தப் படம் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. 

உலகம் முழுவதும் இப்படம் முதல் 6 நாள்களில் எல்லா மொழிகளையும் சேர்த்து ரூ.785 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது 1,000 கோடியை எட்டியது என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்று டவுட்டுதான்.

ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்னும் பெருமையை பாகுபலி அடைந்துள்ளது. ஆனால், இந்த சாதனை இன்னும் கொஞ்ச நாள் மட்டும்தான் பாகுபலி வசம் இருக்கும். ஏன் தெரியுமா?

இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி வரை வசூல் செய்த “தங்கல்” படம் விரைவில் சீனாவில் 9 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

எனவே, பாகுபலி வசூல் சாதனைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் படமாக “தங்கல்” இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இப்போ போட்டி, போன வருடம் ரிலீஸான தங்கலுக்கும், இந்த வருடம் ரிலீஸான பாகுபலிக்கும். பாட்ஷாவா, ஆண்டனியா? பார்க்கலாமா?