This is the editor in the 62nd film of Vijay Eight national awards were bought by ...
எட்டு தேசிய விருதுகளை வாங்கிய எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் தற்போது விஜய்-யின் 62-வது படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணையவுள்ளார். இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே இந்த கூட்டணியில் உருவான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய இரண்டு படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
ஒருபக்கம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மறுபக்கம் இதில் அனிரூத் இசை என்பது எதிர்பார்ப்பை எக்கசக்கமாய் கூட்டியுள்ளது.
இந்த நிலையில் இவர்களுடன் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஒருவரும் பணியாற்றவுள்ளார். ஆம். இந்த கூட்டணியில் எட்டு தேசிய விருதுகள் வாங்கிய ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்.
விஜய்யின் 62-வது படத்திற்கு இப்போதே ஏகபோக வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
