This is the budget of the world super hit Avatar 2 movie?

கடந்த 2009-ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் 'அவதார்'.

சையின் பிக்‌ஷன் திரைப்படமான இதை ஹாலிவுட் முன்னணி இயக்குநர் ஜேமஸ் கேமரூன் இயக்கி இருந்தார்.

உலகிலுள்ள பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் 2500 கோடிக்கு மேல் அமெரிக்க டாலர்களை வசூலித்து உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னிலையில் உள்ளது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்று படக்குழு அறிவித்தவுடனே படம் எப்போ வரும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

இதனையடுத்து படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கேமரூன், அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது 'அவதார் 2' படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார்.

இந்த பாகம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டில் உருவாக இருக்குதாம். அநேகமாக இந்த பாகம் வெளியான பிறகு வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று பேசி வருகின்றனர்.

முந்தைய பாகத்தின் வசூலை விட இரண்டு மடங்காக உயராலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே 'அவதார் 2' 2020-ஆம் ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.