போடுறா வெடிய... 'அண்ணாத்த' ஃபர்ஸ்ட் லுக் தேதி குறித்து கசிந்தது தகவல்..! எகிறும் எதிர்பார்ப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுக்காக கார்த்திருக்கின்றனர் தலைவரின் ரசிகர்கள். அந்த வகையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
 
this is the annaatthe movie first look release date?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதம் படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு,  தலைவர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படக்குழுவிற்கு குட் பை சொல்லிவிட்டு தனி விமானத்தில் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த் இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டும் பின்னர் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

this is the annaatthe movie first look release date?

தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் மீண்டும் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் டப்பிங் பணியை முடித்தவும், மீனா, சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இதை உறுதி செய்யும் விதமாக சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

this is the annaatthe movie first look release date?

கொரோனா கட்டுக்குள் வந்து விட்டால், மத்திய - மாநில அரசுகள் மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்க படும் நிலையில், 'அண்ணாத்த' படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என தீவிர முயற்சியிலும் படக்குழு இறங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள் அன்று, 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் , அதன்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்கிற தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் தலைவரின் ரசிகர்களை உட்சாகமடைய செய்துள்ளது. மிக பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios