திரெளபதி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்ய இயக்குநர் மோகன் ஜி திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வட மாவட்டங்களில் சில தியேட்டர்களை பிடித்து விட்டதாக கூறப்படும் நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்  ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். 

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் இரண்டாவது படமான திரெளபதி படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு சாதியினர் நடத்தும் நாடகக் காதலை படமாக்கி இருப்பதாக படக்குழு விளக்கம் அளித்தது.

அத்துடன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் மற்றொரு தரப்பை சுட்டிக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதனால் மற்றொரு தரப்பு அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?" திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

இதனால் திரெளபதி படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. வழக்கை எதிர்கொண்டு படக்குழு திரைப்படத்தை ரிலீஸ் செய்யுமா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரெளபதி திரைப்படம் பற்றி பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், போலி பதிவு திருமணம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் திரௌபதி என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். 

இந்நிலையில்  இந்தப்படத்தை தென்மாவட்டங்களில் வெளியிடவும் ஆதரவளித்துள்ளனர்.  தென்மாவட்டங்களி இந்தத் திரைப்படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் விநியோக உரிமையை  வாங்கியுள்ளார்.