நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குனர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'வானம் கொட்டட்டும்' . இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்,  நடிகை ராதிகா மற்றும் அவருடைய கணவர் சரத்குமார் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குனர் தனா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டின், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல பாடகர் சித்ஸ்ரீராம்.  

இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் பேசுகையில், பல இயக்குனர்கள் தங்களை நடிக்க வைப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால் அப்படி கேட்ட கதைகள் எதுவும் இருவருக்கும் பிடிக்கவில்லை.

அதனால் இருவருமே சேர்ந்து இத்தனை ஆண்டுகள் படம் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் முதல் முறையாக 'வானம் கொட்டட்டும்' படத்தின் கதையை இயக்குனர் தனா கூறியதும், இருவருக்கும் பிடித்திருந்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டோம். 

அதே நேரத்தில், தனக்கு ராதிகாவிடம் பிடிக்காத விஷயம் என்றால் ஒன்றே ஒன்றுதான்...  கோபம் மட்டும் தான் அவரிடம் பிடிக்காத விஷயம். மற்றபடி அனைத்து விஷயங்களும் மிகவும் பிடிக்கும் என கூறி கூறியுள்ளார் சரத்குமார். இந்த படத்தில் ராதிகா... சரத்குமார் என இருவருமே மிகவும் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.