This is dignity India kamalahaasan speech

நடிகர் கமலஹாசன் முதல் முறையாக ஒரு தொகுப்பாளராக களமிறங்கி கலக்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முற்று புள்ளி வைத்து தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் தனியார் தொலைகாட்சிக்கே எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்... இது குறித்து அவர் பேசுகையில் "பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி மும்பையில் 11 சீசனை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.அந்த வெற்றியின் தைரியத்தில், அனுபவத்தில் விந்திய மலை தாண்டி இங்கு வரும் போது அவர்கள் அணுக வேண்டிய முறை வேறு விதமாகத்தான் இருக்க வேண்டும்...அதற்காக நான் அது வேறு இந்தியா... இது வேறு இந்தியா என நான் பிரிக்கவில்லை என்றாலும் இங்கு உள்ளவர்களுக்கு சுயமரியாதை அதிகம். 

அப்படிபட்ட இந்த இந்தியாவில் என்ன ஒளிபரப்புகிறோம் என்பது மிகவும் முக்கிய மற்றும் அது மக்களின் கட்டளையும் கூட என தமிழகத்தை பற்றி மிகவும் அருமையாக பேசி பொங்கி எழுந்தார்.