சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 

சூப்பர் ஸ்டார் பட அறிவிப்பு என்றாலே சோசியல் மீடியா சும்மா களைகட்டும். ஆனால் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளதாக முதல் நாளே அந்த படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டரில் அறிவித்திருந்தது. அதை கேள்விப்பட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் துள்ளி குதிப்பார்கள் என்று பார்த்தால், பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. 

அதன் பின்னர் சொன்ன நேரத்திற்கு, சொன்ன படி நேற்று முன்தினம் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை. யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் இரண்டாவது இடத்தில் தான் இருந்தது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சாதாரண வீடியோக்கள் கூட ஒரு மில்லியன் வீயூஸ்களை சில மணி நேரங்களில் கடந்துவிடும். ஆனால் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் யூ-டியூப்பில் இதுவரை 9 லட்சம் பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர்.

ஏற்கனவே அண்ணாத்த என்ற பெயர் டைட்டில் ஈர்ப்பாக இல்லை, தூளாக இல்லை, தூக்கலாக இல்லை என்று பல திசைகளில் இருந்தும் ரஜினிக்கு தகவல்கள் வந்ததாம். இந்த நிலையில் டைட்டில் லுக் சோசியல் மீடியாவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது ரஜினியை செம்ம கடுப்பாக்கியுள்ளதாம். 

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான தர்பார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதனால் தான் ரசிகர்களுக்கு ரஜினியின் அடுத்த படம் மீதான ஈர்ப்பு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சன்பிக்சர்ஸ் நிறுவனமும் டைட்டில் லுக் விஷயத்தை நன்றாக விளம்பரப்படுத்தி, ஹைப் கிரியேட் பண்ணி,  ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டிவிடாமல் பொசுக்கென தலைப்பை போட்டுடைத்ததும் தோல்விக்கு காரணம் என்று கருதப்படுகிறது.