this film is different level by siva

அஜித் இதுவரை நடித்துள்ள 56 படங்களின் சாயல் சிறிதுகூட இந்த படத்தில் இருக்காது என்றும், இந்த படம் அஜித்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் விவேகம் பட இயக்குனர் சிவா தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் கூறிவருகிறாராம்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வந்தது. மே 10-ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படியே பல்கேரியாவில் காட்சிப்படுத்த வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. 

தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஒருபுறமும், இன்னொரு புறம் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை திரும்பிய படக்குழுவினர் படத்தின் ரஷ்ஷை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார்களாம். எதிர்பார்த்ததை விட படம் சூப்பராக வந்துள்ளதாகவும், நிச்சயம் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் கூறி வருகின்றார்கள்.

'விவேகம்' படத்திற்கு முன்ன அஜித், சிவா கூட்டணியில் வெளியான 'வீரம்' மற்றும் 'வேதாளம்' படங்களின் சாயல் சிறிதுகூட இல்லாமல் இந்த படத்தை இயக்கியுள்ளாராம். அதுமட்டுமல்ல அஜித் இதுவரை நடித்துள்ள 56 படங்களின் சாயல் சிறிதுகூட இந்த படத்தில் இருக்காது என்றும், இந்த படம் அஜித்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் சிவா தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் கூறிவருகிறாராம்.