இந்நிலையில் நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரிய மொழியில் 2011ம் ஆண்டு வெளியான  blind  படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக நெற்றிக்கண் திரைப்படம் வெளியானது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படம் கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன்தாரா வேற லெவலுக்கு கலக்கியிருப்பதாக ரசிகர்கள் மகிழ்ந்தனர். 

அறம், மாயா, டோரா, மூக்குத்தி அம்மன்  படங்களைத் தொடர்ந்து நெற்றிக்கண் படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறிது நேரத்திலேயே இணையத்தில் கசிந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதற்காக நயன்தாரா கேரக்டரில் தெலுங்கில் நடிக்க அனுஷ்காவிடம் தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.  அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 'லைசன்ஸ்' என்ற படம் கடந்த வருடம் வெளியானது. இந்தப்படத்தில் வாய் பேச முடியாதவாராக அனுஷ்கா நடித்திருந்தார், எனவே நெற்றிக்கண் பட ரீமேக்கிற்கும் இவர் பொருத்தமாக இருப்பார் என நினைத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.