ஒவ்வொரு சின்னத்திரை சேனலும் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம், யாருக்கு அதிகம் பார்வையாளர்கள் இருக்கின்றனர், போன்ற பல காரணிகளை தீர்மானிப்பது, டி.ஆர்.பி ரேட்டிங் தான். இந்த டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற, அனைத்து சின்னத்திரை சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு புது வித நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் சின்னத்திரையில் கடந்த ஆண்டு உச்ச கட்ட டி.ஆர்.பி-ஐ எட்டி, சாதனையை நிகழ்த்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் டல் அடித்தாலும், ஓவியா காரணமாக மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்தது.

இந்த ஆண்டும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தற்போது ஒளிபரப்பி வருகிறது. பெரும் பொருள் செலவில், மிகப்பெரிய குழு பின்னணியில் செயல்பட்டு, இந்த நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பிக் பாஸ், சென்ற ஆண்டை போல டி.ஆர்.பி ரேட்டிங்கில் சாதனைகள் எதுவும் படைக்கவில்லை.

பிக் பாஸ் ஒளிபரப்பாகும் சமயங்களில் எல்லாம், அந்த நிகழ்ச்சி தான் டி.ஆர்.பி-ல் முதலிடம் பிடிக்கும். ஆனால் தற்போது மற்றொரு பிரபல சேனல் தான் அந்த இடத்தினை பிடித்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய சமயத்தில், அந்தசேனலில் தளபதி விஜய்-ன் தெறி படம் போடப்பட்டது. பிக் பாஸை விட ”தெறி” தான் அதிக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

இதனால் அந்த சேனல் டி.ஆர்.பி-ல் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் அந்த அளவிற்கு விரு விருப்பாக இல்லாததும், போட்டியாளர்களிடம் யதார்த்தத்தை காட்டிலும் செயற்கை தனம் அதிகம் இருப்பதாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த முதல் இடத்தை இன்னும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.