this Bollywood actress faces controversies again
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏதாவது தவறு செய்து, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். இது அவருக்கு வழக்கமான ஒன்று. சமீபத்தில் அவர் செய்திருக்கும் ஒரு செயலுக்கு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் கான், செய்த காரியம் தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மூலக்காரணம்.
சல்மான் கான் நடிப்பில் ரேஸ் 3 திரைப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்திருப்பவர், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். இந்த இருவரும் ரேஸ் 3 பிரமோஷனுக்காக, ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித் நடுவராக பங்கேற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவனிடம் ஜாக்குலினை கட்டிப்பிடிக்குமாறு சல்மான் கூறினார். அந்த சிறுவன் வேண்டாம் என மறுப்பு கூறினான். அந்த சிறுவன் மிகவும் கூச்ச சுபாவத்துடன் தனக்கு இது போன்ற செயல்கள் பிடிக்காது என அழகாக, தெளிவாக, கூறியும் சல்மான் அவனை மிகவும் கட்டாயப்படுத்தி, ஜாக்குலினை கட்டி பிடிக்க வைத்தார்.
@BeingSalmanKhan@Asli_Jacqueline If a kid repeatedly says he doesn't want to hug you, shouldn't you probably respect his wishes and consent and mind your own business and understand simple "NO" https://t.co/AyBLikaCnM#WeToo#Metoomovement
— Tanya Chaitanya (@girlmeetstartup) May 29, 2018
இதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ஜாக்குலின் ”பொதுவாக குழந்தைகளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த சிறுவன் வித்தியாசமான இருக்கிறான். ஆனால் கடைசியாக அவனிடம் இருந்து எனக்கு ஹக் கிடைத்துவிட்டது” என பதிவிட்டிருந்தார்.
ஆனால் இந்த சம்பவத்தில் சல்மான் அந்த சிறுவனை அவனது விருப்பத்தையும் மீறி கட்டாயப்படுத்தியதை, மக்கள் கண்டித்து டிவிட்டரில் திட்டி இருக்கின்றனர். மேலும் இந்த குழந்தைக்கு தெரிந்த மேடை நாகரீகம் கூட உங்களுக்கு தெரியவில்லையே, அவன் வேண்டாம் என்று சொன்னால் விட்டு விட வேண்டியது தானே? சல்மான் என அவரிடம் கேட்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
