this actress give voice over for the famous Tamil actress
தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் சினேகா. திருமணமாகி கணவர் குழந்தை என செட்டிலாகிவிட்ட இவர். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என இப்போதும் இவர் பிஸியாக தான் இருக்கிறார்.
சமீபத்தில் கூட ஒரு பிரபல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் இவர் நடுவராக கலக்கி இருந்தார். புதுப்பேட்டை திரைப்படம் சினேகாவின் திரையுலக வாழ்வில் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பல ஹீரோயின்கள் ஏற்க தயங்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று மிகவும் தைரியமாக அதில் நடித்திருந்தார் சினேகா.

அந்த படத்தில் அவருக்கு குரல் கொடுத்திருந்தது கூட ஒரு பிரபலம் தான். தமிழ் திரையுலகில் துணைநடிகையாக பல படங்களில் நடித்து, இப்போது சீரியல்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வரும் தேவிப்பிரியா தான், சினேகாவிற்கு புதுப்பேட்டையில் டப்பிங் பேசியிருக்கிறார்.
