this actress do not have fashion sens says her fans

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன பிரேமம் திரைபடத்தின் மூலம், பிரபலமானவர் நடிகை அனுபமா. இவர் தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் பெரிய அளவில் இவருக்கு கிடைக்கவில்லை.

ஆனால் தெலுங்கு திரையுலகில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. தற்போது கூட இவர் நடிப்பில் மூன்று தெலுங்கு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

ஆனால் இவருக்கு மலையாளம் மற்றும் தமிழில் எந்த பட வாய்ப்பும் இல்லை. இதனால் இவர் படவாய்ப்பிற்காக அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று, இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

முழு உடலையும் மறைக்கும் படி டீசண்டாக இவர் உடை அணிந்திருந்தாலும், அதில் அவருக்கு ஃபேஷன் சென்ஸ் இல்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு.

புகைப்படத்தில் அனுபமா அணிந்திருந்த அந்த உடை, பாதி ஒரு உடையிலும், மற்றொரு பாதி இன்னொரு உடையிலும் இருந்து கிழித்து தைத்தது போல இருந்தது. என்ன அனுபமா முழுசா துணி வாங்க காசு இல்லையா? பாதி பாதியா தைத்து போட்டிருக்கீங்க? என அவரை கலாய்த்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.