தென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பேட்ட'படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

 தென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பேட்ட'படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு , 'எங்கேயம் எப்போதும் சரவணன் ' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

படத்தின் கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இருக்கிறார்.அவரிடம் உதவி இயக்குனராக இருந்த சரவணன் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என தெரிகிறது. இந்த படத்திற்காக தனது சிகை அலங்காரத்தை மாற்றி இருக்கிறார் திரிஷா. தலைமுடியின் நீளத்தை குறைத்து இருக்கிறார். 'எங்கேயும் எப்போதும் சரவணன்' படத்தில் அவர் புதிய அலகாரத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையடுத்து திரிஷா, சிம்ரனுடன் இணைந்து ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.