Asianet News TamilAsianet News Tamil

ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறாரா திரிஷா..?

'காலா' படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

thirusha acting for super star rajinikanth
Author
Chennai, First Published Aug 17, 2018, 2:30 PM IST

'காலா' படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இமயமலை பகுதிகளில் நடத்தப்பட்டது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கினர் படக்குழுவினர். இதனால் இந்த படத்தில் ரஜினி அந்த கல்லூரி வார்டன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. thirusha acting for super star rajinikanth

அதிரடி காட்சிகள், நகைசுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இந்த எடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இமையமலையை தொடர்ந்து சென்னை,  மதுரை, உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாகவும் , பாபிசிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

thirusha acting for super star rajinikanth

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவில் இந்த படத்தில், மற்றொரு கதாநாயகியும் இருக்கிறாராம். அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை திரிஷா நடிப்பதாக கூறப்படுதிறது. மேலும் இந்த படத்தில் திரிஷா நடிப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.

thirusha acting for super star rajinikanth

ரசிகர்கள் விரும்பும் வகையில், ரஜினி இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் என கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios