பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14ம் தேதியும் வெளியாக உள்ளது. இதையடுத்து திரையுலகினரின் நீண்ட நாள் கோரிக்கையான தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அனுமதி அளித்தது. 

ஆனால் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தால், கொரோனா தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது என மத்திய அரசு, தமிழக அரசின் அரசாணையை திரும்ப பெறவேண்டும் என கூறியுள்ளது. இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒருவேளை 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் என்ன நடக்கும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது அது மட்டுமின்றி மதுரை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசின் ரசனைக்கு எதிராக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கும் வர உள்ளது.

இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட வாய்ப்பில்லை என்கிற தகவல் பரவலாக கூறப்படுவதை தொடர்ந்து, ஒரு வேலை அரசு, அரசாணையை  திரும்பப் பெற்றால் வரும் பொங்கல் திருநாளில் ’மாஸ்டர்’ திரைப்படம் மட்டுமே வெளியிடப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்வரன் படம், பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பில்லை என்பது போல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.