நடிகர் விஜய் நடித்த 'திருப்பாச்சி' படத்தில் அவருக்கு நண்பனாக கண்ணப்பன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் பெஞ்சமின். நாடக கலைஞரான இவர், இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு பார்த்திபன் - முரளி இருவரும் இணைந்து நடித்து வெளியான 'வெற்றிகொடிக்கட்டு' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், திருப்பாச்சி படம் தான் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இதுவரை சுமார் 50 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனித்துவமான பேச்சால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காமெடி நடிகர் பெஞ்சமின் விரைவில், உடல் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 16, 2020, 11:44 AM IST