thimiru Shreya is back to screen after nine years

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு “அண்டாவ காணோம்” என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் “அண்டாவ காணோம்”.

இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படத்தின் இசை வெளியீடு சென்னையில் சமீபத்தில் நடைப்பெற்றது.

அப்போது ஸ்ரேயா ரெட்டி பேசியது: “ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் நான் நடிக்க வந்திருக்கும் படம் இது. இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார்.

நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேராக ஷூட்டிங்க்கு வாங்க என்றார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லிக் கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது” என்றார்.