they will solve the problem says super star

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரில் சென்றிருக்கிறார். சென்ற வாரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, 13 பொது மக்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும், தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். மேலும் அங்கு பதட்டமான சூழல் நிலவியபோதும் கூட, 144 தடையையும் மீறி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் செய்தனர்.

தற்போது அந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஆணைப் பிறப்பித்து இருக்கிறது அரசு. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சுமூக நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது தூத்துக்குடி.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தார். மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்போவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் நல்லெண்ணத்தின் அடிப்படியில் மட்டுமே தான் தூத்துக்குடிக்கு வந்திருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.

அப்போது அவரிடம் காலா திரைப்படத்திற்கு ”கர்நாடகாவில் வட்டாள் நாகராஜ் விடுத்திருக்கும் சவால் குறித்து” பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி இந்த பிரச்சனைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.

நானே நேற்று தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து தான் இந்த பிரச்சனை குறித்து தெரிந்து கொண்டேன். கர்நாடக திரை அரங்குகள் தென்னிந்தியாவில் இருக்கும் திரையரங்குகளுக்குள் தான் வரும். எனவே தென் இந்திய திரையரங்குகள் சங்கம் அதில் தலையிட்டு இந்த பிரச்சனையை சமாளித்து கொள்வார்கள். இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் எனவே நம்புகிறேன என தெரிவித்திருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் வரும் ஜீன் 7 அன்று திரைக்கு வரவிருக்கிறது.