Asianet News TamilAsianet News Tamil

கல்யாணராமனை கைது செய்தது போல்... இவர்களையும் கைது செய்ய வேண்டும்! இயக்குனர் அமீர் கோரிக்கை!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய  பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர்  கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டையொட்டி, கல்யாண ராமன் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து செய்தனர். 
 
they should be arrested too like kalyanaraman director amir requesting
Author
Chennai, First Published Feb 2, 2021, 11:55 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய  பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர்  கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டையொட்டி, கல்யாண ராமன் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து செய்தனர். 

இந்நிலையில் , இவர்களை போல்... மற்ற இருவரையும் கைது செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக பிரபல திரைப்பட இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

they should be arrested too like kalyanaraman director amir requesting

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... "தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய  மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் என்னும் அயோக்கியனை கைது செய்த தமிழக அரசிற்கு என்னுடைய பாராட்டுக்கள். 

they should be arrested too like kalyanaraman director amir requesting
சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும்  பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வண்மையாக கண்டிக்கிறேன். 

இந்த நேரத்தில் முகம்மது நபியின் மீது பேரன்பு கொண்ட சமூகத்தினர் பாசிச சக்திகள் தமிழகத்தில் எதிர்பார்க்கின்ற எதிர்வினைகளை ஆற்றாது அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும்  முகம்மது நபியின் தத்துவங்களையும் அவரின் சமூக செயல்பாட்டையும் மனித குலத்திற்கு அவர் ஆற்றிய பங்கையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிறேன். 

they should be arrested too like kalyanaraman director amir requesting

தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளை மறக்கடிக்கும் விதமாகவும் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்ட கல்யாணராமனை கைது செய்தது போல் தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடும் வேலூர் இப்ராஹிமையும் கைது செய்து அவர்கள் இருவரின் மீதும்  தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அமீர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios