theri movie 50 million views in youtube channel
அட்லீ இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிக பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படம் தெறி. இந்த படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிக்கா மற்றும் நடிகர் விஜயின் மகள் திவ்யா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 150 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை பிரபல யு-டியூப் ஊடகம் ஒன்று இந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டது. அதில் தற்போது வரை 50 மில்லியன் நேயர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர், தமிழில் இருந்து ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படங்களில் அதிக ஹிட்ஸ் தெறிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
