There is two chocolate boys in single film

'ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் நடித்து ஹிட் அடித்த மலையாள படமான 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மாதவனும், 'ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் நடித்த மலையாள படமான 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவனை இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் மீண்டும் வெற்றிகரமான தமிழுக்கு ரீ எண்ட்ரி ஆகியுள்ள மாதவனும், ஓகே கண்மணி' மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த துல்கர் சல்மான் ஆகிய இருவரும் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை'வெற்றிவிழா' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரதாப் போத்தன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த படத்தில் நாயகியாக 'கபாலி' புகழ் தன்ஷிகா நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மாதவன், துல்கர் சல்மான் இருவருமே பெண்களுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பாய்ஸ். இருவரும் சமமாக கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவருமே மணிரத்னம் இயக்கிய படங்களில் ஹீரோவாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலிமேனன் திரைக்கதை எழுதும் இந்த படம் தமிழ்,மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.