There is no cinema chance - so getting ready for marriage

ஏகப்பட்ட பில்டப்களுடன் எண்ட்ரி கொடுத்த மச்சினி நடிகை வாய்ப்பில்லாமல் சும்மா இருப்பதால் வீட்டில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்கிறார்களாம். 

தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகரின் மச்சினி அவர். சிம்மக் குரலோன் குடும்பத்து வாரிசு நடிகருடன் ஒரு படத்தில் தமிழில் அறிமுகமானார். மச்சினி என்பதால் ஏகப்பட்ட பில்டப்கள் தரப்பட்டன.

ஆனால் படம் படு ஃப்ளாப் ஆனது. நடிகையின் நடிப்புக்கும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன. அதோடு நடிகர் ஸ்டைலில் மச்சினியும் பட புரமோஷனுக்கு வரவில்லை என்பதால் இண்டஸ்ட்ரியே கடுப்பானது. நடிகைக்கு அடுத்து படம் எதுவுமே வரவில்லை. 

சரி... இனி நடிக்க வேண்டாம் என்று சொன்ன குடும்பம் நடிகைக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறதாம்.