There is adjustment with big hero said heroin
பிரம்மாண்ட சரித்திர படத்தில் நடித்ததில் இருந்து தமன்ன நடிகையின் பந்தா அதிகமானதாகவும், சம்பளம் அதிகம் கேட்பதாகவும் செய்திகள் வந்தன. அவை அத்தனையையும் பொய்யாக்கி விட்டாராம் நடிகை.
பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகத்தில் அருந்ததி நடிகைக்கு தான் அதிகம் ஸ்கோப் தரப்பட்டிருந்தது.
இந்த நடிகை ஒரே ஒரு காட்சியில் தான் வந்தார். ஆனால் அந்த படத்துக்கு பின் நடிகை அதிக சம்பளம் கேட்பதாக செய்தி வந்தது.
ஆனால் உண்மை அப்படி இல்லையாம். ஹீரோக்களை மட்டுமே பார்த்து நடிகை படங்களை ஒப்புக்கொள்கிறாராம். பெரிய ஹீரோ என்றால் சம்பளத்திலும் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாராம்.
பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் தான் சலுகையா மேடம்?
