ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்க்கார் திரைப்படத்துக்கு தடை வேண்டும் என குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர் என்பவர் தற்போது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் சம்பவம் மேலும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த தாகபூமி என்ற குறும்படத்தை தான் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்கி உள்ளதாகவும் அதனை பதிவு செய்து உள்ளதாகவும் கூறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்  இருந்து வருகிறார்.

அதாவது, ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்ந்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குனர் வேண்டும் என கேட்டு இருந்தார் என்றும், அந்த கதையை கதைத்தான் கத்தி படத்தில் அவர் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்காக, தனது தாகபூமி என்ற குறும்பட வீடியோவை முருகதாசுக்கு  அனுப்பி வைத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாகவே போராட்டம் செய்து வருவதாகவும் அவர்  தெரிவித்து உள்ளார். 

இந்நிலையில், தனக்கு ஒரு பதில் கிடைக்கும் வரை, சர்கார் படத்தை வெளியிட கூடாது என தன் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு முன்னதாக, வருண் என்பவர் தன்னுடைய செங்கோல் கதையை தான் சர்கார் படமாக முருகதாஸ் எடுத்து உள்ளார் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து  அவருக்கு நீதி அங்கீகாரம் கிடைத்து விட்ட்து. மேலும் சர்கார் படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை என  நினைத்த இந்த தருணத்தில், மீண்டும் சர்காருக்கு இப்படியொரு பிரச்சனை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.