theepika padukone head rate is 5 crores

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள மிக பிரமாண்டமான திரைப்படம் 'பத்மாவதி' இந்தப் படத்தின் ட்ரைலர் சபீபத்தில் வெளியாகி மிகப் பெரிய சாதனை படைத்தது. மேலும் விரைவில் இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

'பத்மாவதி' ராணியின் வழக்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் பத்மாவதி ராணியை தவறாக சித்திரித்து இயக்குனர் படம் இயக்கியுள்ளதாகக் கூறி பலர் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என கூறிவருகின்றனர்.

மேலும் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, நடிகை தீபிகா படுகோன் ஒரு இந்தியராக இருந்துகொண்டு 'பத்மாவதி' ராணியை அவமதிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறி, அவருடைய தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி சன்மானமாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ள்ளது.

இந்தப் படத்திற்கு இப்படி ஏகப்பட்ட மிரட்டல்கள், மற்றும் எதிர்ப்புகள் தொடர்ந்து வரும் நிலையிலும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்தே தீருவோம் என படக்குழுவினர் உறுதியாக உள்ளனர்.