பிரபல நாடக நடிகர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், காலமானார். இந்த தகவல் சின்னத்திரை மற்றும் நாடக கலைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரு நாடக கலைஞராக இருந்து, பின்னர் 100 க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்கள், மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் ராம்கி. குணசித்ர வேடங்களில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அப்படியே பொருந்தி நடிப்பார். சுமார் 3000 திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

வெள்ளித்திரை படங்களில் நடிப்பதை விட சின்னத்திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதையே அதிகம் விரும்பினார். நடிகை ராதிகா, சுகன்யா, பானுப்ரியா உள்ளிட்ட நடிகைகள் நடித்த சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சமீப காலமாகவே வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இவரது மறைவு, சின்னத்திரை மற்றும் நாடக நடிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.