The truth is knowing Why Kattappa killed Baahubali? who is the wife of pal Vaal Devan

எஸ்.எஸ்.ராஜமெளலி பாகுபலி ப்ராஜெக்டுக்கு கையெழுத்து போட்டன்னைக்குதான், நம்ம மயிலாப்பூர் கவிதா மாமியோட பொண்ணு ஷாமளாவோட கர்ப்பம் கன்ஃபர்ம் ஆச்சு கேட்டியோ. இன்னைக்கு ஷாமளாவோட வாண்டுக்கு ஆறு வயசு ஆகப்போறது அதுக்குள்ளே ராஜமெளலி, பாகுபலியில ரெண்டு பார்ட்ஸ் கொடுத்து இன்டர்நேஷனல் லெவல்ல பாக்ஸ் ஆபீஸை பிரிச்சு மேய்ஞ்சுட்டர்! இதெல்லாம் வெறும் மனுஷா உழைப்பு மட்டுமில்லேங்கானும், சாட்ஸாத் அந்த பரந்தாமனோட சித்தமும் வேணுங்றேன். 

கும்பகோணத்து தியேட்டர் கேண்டீன் ஒன்றில் நான் கேட்ட டயலாக் இது. ஏறக்குறைய தென்னிந்திய மக்களின் டேடுடே வாழ்க்கை பயணத்தோடு ஒன்றியேவிட்டது பாகுபலி. ”பாகுபலி பார்ட் 1 ரிலீஸான அன்னைக்கு அவன் என்னை ப்ரபோஸ் பண்ணினான் அதுக்கு பிறகு எனக்கு எட்டு பிரேக் அப்ஸ்! பாகுபலி 2 ரிலீஸ் டேட்டும் எங்க மேரேஜ் டேட்டும் ஒண்ணுதாம்ணே, அண்ணாச்சி உங்க கடை ஓப்பனிங் டேட் எனக்கு நல்லா நெனவுல இருக்கு பார்த்துக்கிடுங்க, அன்னைக்கு நைட்ல நானும் எம் பொஞ்சாதியும் பாகுபலி பார்க்க போணோம்லா!” என்று சர்வசாதாரணமாக இந்த படத்தை மேற்கோள் காட்டி தங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை குறிப்பிடுகிறார்கள் மக்கள். 
பாகுபலியின் ரியல் ஹீரோ பிரபாஸ் இல்லை நிச்சயம் ராஜமெளலிதான்.

மக்கள் தன் படைப்பை கொண்டாடுகிறார்கள், பில்லியன்கள் குவிகிறது என்பதற்காக மெளலி ‘மீண்டும் வருவான், பாகுபலியின் பயணம் தொடரும்’ என்று வழக்கமான தத்துப்பித்து தனங்கள் எதையுமே செய்யாதது அந்த மகா கலைஞனின் மேல்நிலை சிந்திப்புத்தன்மையை காட்டுகிறது.

வருடத்துக்கு ஒரு முறை வந்தால்தான் தீபாவளிக்கு மதிப்பு, சங்கடஹர சதுர்த்தி போல் மாதந்தோறும் வந்தால் மக்கள் திரளமாட்டார்கள் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார். இது மெளி ஒரு பெரும் படைப்பாளி மட்டுமல்ல வணிக ரீதியிலும் தேர்ந்த மனிதன் என்பதை காட்டுகிறது. 

ஐந்து ஆண்டுகளாய் ஒரே நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து ஒரு சர்வதேச ஹிட் படையலை உருவாக்குவதென்பது எந்த வகையிலும் எளிதான காரியமில்லை. ‘அட போங்கடா! ஏழு வருஷமா அந்த மெகா சீரியல் ஓடலையா?’ என்று சிலர் கார்னரிங் கேள்விகள் கேட்கலாம்.

ஆனால் அதற்கும் இதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. சீரியலின் முதன்மை நாயகியோ அல்லது நாயகனோ உள்ளிட்ட எந்த கேரக்டரும் எந்த நேரத்திலும் செம சிம்பிளாக கழட்டிவிடப்படலாம்.

‘இனி இவருக்கு பதில் இவர்’ என்று இரண்டு போட்டோக்களை காட்டி காரியத்தி முடித்துவிடுவார்கள். ஆனால் பாகுபலி அப்படியா? சீரியலின் கமர்ஷியல் கேன்வாஸ் சாதாரணம், ஆனால் இந்த படத்தின் கேன்வாஸோ அசுர அசாதாரணம். 

பாகுபலி கலைஞர்களிடம் முதல் பாகத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதே இரண்டாம் பாகத்துக்கானதிலும் கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்கிறார்கள். எந்த நடிகரும் எந்த சூழ்நிலையிலும் முரண்டு பிடிக்கவோ, பின் வாங்கவோ இல்லை என்கிறார்கள். ஏனென்றால் சர்வ நாடுகளின் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த திரைப்படத்தில் ஏதோ ஒரு கேரக்டர் தங்களுக்கு கிடைக்காதா என்று ஏங்கிய பெரிய நட்சத்திரங்கள் ஏராளம்.

நடிகர் சூர்யா கூட முதல் பாகத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் முடிந்த பின், இரண்டாம் பாகத்தில் தனக்காக ஒரு கர்சீப்பை நைஸாக போட்டு இடம்பிடிக்க முயன்றது நினைவிருக்கலாம். ஆனால் ராஜமெளலி யாருக்காகவும், எதற்காகவும் தன் படைப்பிலும், அதன் உருவாக்கத்திலும், நட்சத்திர தேர்விலும் சமரசம் செய்து கொள்ளவேயில்லை. அந்த டெடிகேஷந்தான் அவரது படைப்பை எங்கோ கொண்டு நிறுத்தியிருக்கிறது.

ஐந்து கோடி ரூபாய் செலவில் மயங்க மயங்க கட்டப்பட்டுள்ள ஹைடெக் வில்லாவின் ஜன்னல் ஓரத்தில் ஐந்தே ரூபாய் மதிப்புடையை ஒரு திருஷ்டி பூசணி கண்களை உருட்டியபடி உட்கார்ந்திருக்கும். அதேபோல் பாகுபலி 2 திரைப்படத்திலும் சில சிறு முரண்கள், பிசுறுகள் உள்ளன என்கிறார்கள் ஷோவுக்கு லேட்டாய் வந்தாலும் தீர ஆராய்ந்த விமர்சகர்கள். 

அதில் மிக முக்கியமானது பல்வாள் தேவனின் மனைவி யார்? என்பதே. தேவசேனாவை அடைவதே வாழ்க்கை லட்சியமாக கொண்டு துடிக்கும் பல்வாள் தன் மகனின் தாய் யார்? என்று வாய்ஸ் ஓவரில் கூறுவதாகவாவது காட்டியிருக்கலாம் என்கிறார்கள். சரி விடுங்க பாஸ்!

ஆனால் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?’ என்று முதல் பாகம் கேள்வி எழுப்பியது போல் அதிரிபுதிரியாக, பல்வாளின் மனைவி யார்? என்கிற கேள்வி மக்களிடம் எழவில்லை என்பது ஆறுதல்தான்.