பீட்டர்பாலின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்ததே 1கோடி பணம் கேட்டு மிரட்டுவதற்காக தான் என்று பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.


வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் திரைப்பட இயக்குனர் பீட்டர் பவுலுக்கும் நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார்.இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.நாங்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.என்னிடம் விவாகரத்து வாங்காமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதில் தனக்கு பீட்டருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்று தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.


இந்த புகார்குறித்து வனிதா பேசுகையில், "இது எதிர்பார்த்த ஒன்று தான்.. பீட்டர் 8 ஆண்டுகளுக்கு முன்பே அவரைப் விட்டு பிரிந்துவிட்டார். மேலும் நாங்கள் திருமணம் செய்வது எலிசபெத்திற்கு தெரியும் என்றும் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை சட்ட ரீதியாக நாங்கள் சந்திக்க தயார் என்றும் தற்போது நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். பீட்டர் மிகவும் நல்லவர்... புகழ் வரும் போது சில பிரச்சினை வரும். இதனை சினிமாவில் ஏற்கெனவே தான் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.