ராஷ்மிகா ஆட்டத்தால் பிளாட் ஆன சல்மான் கான்! டிரெண்டாகும் சிக்கந்தர் பட டைட்டில் டிராக்
சிக்கந்தர் படத்தில் டைட்டில் டிராக் பாடலாக உருவாகி உள்ள 'சிக்கந்தர் நாச்சே' பாடலின் டீசரில் சல்மான் கான், ராஷ்மிகா கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கிறது.

The title track teaser of the film Sikandar has been released! சல்மான் கான் நடிச்ச சிக்கந்தர் படம் வருகிற மார்ச் 28-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதில் புஷ்பா, அனிமல் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். சல்மான் கான், ராஷ்மிகா ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
'சிக்கந்தர்' படத்துல இதுவரைக்கும் வந்த பாடல்களில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவல்ல இருக்கு என பாராட்டுக்கள் குவிந்துள்ளன. 'ஜோரா ஜபின்', 'பம் பம் போலே' பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில் தற்போது 'சிக்கந்தர் நாச்சே' என்கிற டைட்டில் ட்ராக் பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் இருவரும் செமையாக ஆடியிருக்கிறார்கள். சல்மான் கான் அவரோட சோஷியல் மீடியா பக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தின் டைட்டில் டிராக் பாடலின் டீசரை ரிலீஸ் பண்ணி உள்ளார்.
இதையும் படியுங்கள்... சிக்கந்தர் டீசர்: கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் SK-வை வைத்து மாஸ் காட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்
23 செகண்ட் இருக்கற இந்த வீடியோவில் சல்மான் கான் மாஸாக இருக்கிறார். ராஷ்மிகா அழகாக டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சல்மானோட இந்த லுக் 'டைகர்' படத்துல இருந்த மாதிரி இருக்குன்னு ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். சல்மான் கருப்பு கலர் டிரஸ்ல ஒரு பார்ட்டிக்கு வர்ற மாதிரி இருக்கு. இது 'ஏக் தா டைகர்' (2012) படத்துல வந்த மாதிரி இருக்கு. ராஷ்மிகா வெள்ளை கலர்ல தேவதை மாதிரி இருக்காங்க.
இந்த டீசர் ரசிகர்களை மிகவும் இம்பிரஸ் செய்துள்ளது. இந்த பாடலின் டீசரை பார்த்த பலரும் சல்மான், கத்ரீனா நடிச்ச 'ஏக் தா டைகர்' படத்துல வந்த 'மாஷா அல்லாஹ்' பாட்டு மாதிரி இருக்குன்னு கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலரோ இது பீஸ்ட் படத்தில் வரும் அரபிக் குத்து பாடலை நினைவூட்டுவதாக கூறி வருகின்றனர். சிக்கந்தர் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 28ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... சிக்கந்தர் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து தோற்றத்தை மாற்றிய சல்மான் கான்!