*    தமிழில் ‘காதல்’ படங்களுக்கு என்னைக்குமே செம்ம ஸ்பேஸ் உண்டு. ஆனால், நீண்ட காலமாக பேய் மற்றும் ஆக்‌ஷன் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த நிலையில் சமீபத்தில் ’96’ படம் செம்ம ஹிட்டானது. இதை தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். படம் ரிலீஸாகி ஒருவாரம் ஆன நிலையில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் கூட வசூல் சோபிக்கவில்லை. பதினாலு கோடி ரூபாய் அந்தரத்தில் தொங்குவதாக தயாரிப்பாளர் கண் கலங்குகிறார். 
(ரியல் லவ்வுல என்ன சார் பணத்தை பத்தி யோசிச்சுகிட்டு! ஃப்ரீயா விடுங்க)

*    தளபதி விஜய் தன் புதிய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டிக் கதை சொல்வார், அரசியல் பஞ்ச் அடிப்பார். இது செம்ம டிரெண்டாகும். அவரது இந்த ஸ்டைலை அப்படியே வைத்து ஒரு பாட்டையே உருவாக்கிவிட்டனர் ‘மாஸ்டர்’ பட டீமினர். அனிருத்தின் அழகான இசையில் பிப்ரவரி 14-ல் முதல் சிங்கிள் ரிலீஸ். பாட்டின் முதல் வரி ....’ஒரு குட்டிக் கதை....’
(தளபதி  நீங்க கதை  சொன்னா நாங்க கேக்காமலா இருப்போம்?....)

*    தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார்! என்று அவரே சொல்லியதாக ஒரு ட்விட்டர் கணக்கு சொல்லியது. இதில் பலருக்கு அதிர்ச்சி. ‘அவரே டைரக்‌ஷன் வாய்ப்பு இல்லாமதான் நடிக்க வந்திருக்கார். இப்ப அஜித் அவரை தேடிப் பிடிச்சு நடிக்க போறாரா? ஏன் இவருக்கு இப்படி போகுது புத்தி!’ என்று நொந்தனர். இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரே ‘அது வதந்தி. எனக்கு ட்விட்டரில் கணக்கே இல்லை!’ என மறுத்துட்டார். 
(ட்விட்டர்ல கணக்கு இல்லை சரி. நல்ல கதையாவது கைவசம் இருக்குதா சார்?)

*    பிகிலோடு மோதி பாக்ஸ் ஆபீஸை பதறவைத்த படமென்றால் அது கைதிதான். ஹீரோயின், டூயட், காமெடி என எதுவுமில்லாவிட்டாலும் தமிழ் ரசிகன் , நல்ல கதையை ஹிட்டாக்குவான் என நிரூபித்த படம். இதை பல மொழிகளில் ரீமேக்கிட கடும் போட்டி. இந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்க விரும்புகிறார்! என்கிறார்கள். 
(ஹிரித்திக் ரோஷனுக்கு விபூதி பட்டை போட்டா நல்லாவா இருக்கும்?)

*    ஏ.ஆர்.முருகதாஸுக்கு இது செம்ம கெட்ட டைம். சர்கார் படம் ஹிட் என்றாலும் ‘திருட்டுக் கதை’ என்று ஆதாரப்பூர்வமாக பெயர் வாங்கி கொடுத்தது. தர்பார் அப்படி பஞ்சாயத்தில் சிக்கவில்லை. இருந்தாலும் படம் நஷ்டம்! என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். 
இந்த நிலையில் அடுத்து யாரை வைத்து படமெடுப்பது? என ஏ.ஆர்.எம். அலை பாய்கிறார். ஆனால் இதுவரையில் யாருமே அவரிடம் சிக்கவில்லை என்பதுதான் கொடுமை. 
(அண்ணே நம்ம கேப்டன் தேறிட்டாரு. ரமணா -2 துவக்கிடலாமா?)