The shooting problem for rajini kaala film - in case

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் காலா கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி உள்ளநிலையில் சென்னையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் காலா திரைப்படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு தன்னுடையது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால் அவரோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறி புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டார். இதற்கிடையே கரிகாலன் என்ற என்னுடைய தலைப்பையும், கதைக்கருவையும் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் திருடி படத்தை எடுக்க உள்ளனர்.எனவே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளுக்கு உடனடியாக தடை விதித்து நடவடிக்கை எடுக்கும்படி இக்கடிதம் கேட்டு கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கதை மற்றும் திரைப்படத்தின் பெயரை உரிமை கோரி நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருப்பதால், காலா படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.....