சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் வேலைக்காரன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

மெரினா படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் தனது காமெடி சென்ஸால் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்களிடையே விரைவிலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.

தனி ஒருவன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். இதில், சிவகார்த்திகேயன் – நயன்தாரா இருவரும் முதன் முதலாக இணைந்து நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சினேகா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, ரோஹினி, பஹத் பாசில் ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றன்ர்.

தற்போது வேலைக்காரனின் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன். மேலும் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடி மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

டீசரின் வரவேற்பு எப்படினு போக போகதான் தெரியும். நீங்களும் டீசர் எப்படி இருக்குனு பாருங்க.