பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் நயன்தாராதான் நடத்தப்போகிறார் என்று பரவிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று தெரிய வந்துள்ளது. மூன்றாவது சீஸனையும் அதே விஜய் டி.வி.யில் தொடரவிருப்பது சாட்சாத் கமலேதானாம்.

சில தினங்களுக்கு முன்பு கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் நயன்தாரா படத்தை டேக் செய்து விரவில் கலர்ஸ் சேனலில் நயன்தாரா என்ற ட்விட்டர் பதிவை வைரலாக்கிவிட்டிருந்தது. அதைக் கண்டதும் செய்திப் பஞ்சம் தலைவிரித்தாடும் மீடியா மக்கள் பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி விஜய் டி.வி.யிலிருந்து கலர்ஸ் சானலுக்கு மாறவிருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் நயன் நடத்திவிருப்பதாகவும் கண்,காது, மூக்கு வைத்துக் கொளுத்திப் போட்டனர்.

ஏழெட்டுப் படங்களைக் கையில் வைத்துக்கொண்டு, அதிலும் குறிப்பாக ரஜினி, விஜய் படங்களை அடுத்தடுத்து வைத்துக்கொண்டு எப்படி நயன் பிக்பாஸ்க்கு கால்ஷீட் கொடுக்க முடியும் என்ற குழப்பம் ஒரு பக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சிக்கு மாறவும் இல்லை. கமல் நிகழ்ச்சியை விட்டு ஓடவும் இல்லை என்ற உண்மை வெளிவந்திருக்கிறது. பிக்பாஸ்3 நிகழ்ச்சியை விஜய் டி.வி.யே கையில் வைத்திருக்கிறது. மீண்டும் கமலே பிக் பாஸ்.

அப்புறம் கலர்ஸ் சானலின் நயன்தாரா மேட்டர்?...அவரது லேட்டஸ்ட் ஹிட் ரிலீஸான ‘இமைக்கா நொடிகள்’ படத்தை சானலில் வெளியிடும் உரிமையை அந்த தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. அதை விரைவில் ஒளிபரப்பவிருப்பதற்கான பில்ட் அப்தான் ‘விரைவில் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் நயன்தாரா’வாம். வாவ் வாட் எ  பிக் சீட்டிங் பாஸ்?