Asianet News TamilAsianet News Tamil

மறைந்த நடிகர்கள் எவருக்கும் இறுதி ஊர்வலத்தில் கிடைக்காத கெளரவம்... விவேக் ரசிகர்களின் உருக்கமான வீடியோ!

விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க பங்கேற்றனர்.

The public at the funeral carrying saplings in their hands at actor vivek funeral
Author
Chennai, First Published Apr 17, 2021, 5:20 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விவேக் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இருதய துடிப்பு குறைந்ததை அடுத்து ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விவேக்கின் உட ல் நிலை குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்தே உறுதியாக சொல்ல முடியும் என கெடு விதித்திருந்த நிலையில் , இன்று அதிகாலை 4.35 மணி அளவில் மரணமடைந்தார்.

The public at the funeral carrying saplings in their hands at actor vivek funeral

காலை சுமார் 6.30 மணி அளவில் நடிகர் விவேக்கின் உடல் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி,  நாசர், சூரி, இமான் அண்ணாச்சி, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், ஜெய்,  எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நடிகைகள் ஆர்த்தி, இந்துஜா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

The public at the funeral carrying saplings in their hands at actor vivek funeral

பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான திரைப்பிரபலங்கள் சோசியல் மீடியாவில் தங்களுடைய இரங்கலை பதிவு செய்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விவேக் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியில் நடிகர் விவேக்கின் உடல் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் மயானம் நோக்கி புறப்பட்டது. 

The public at the funeral carrying saplings in their hands at actor vivek funeral

விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தில் நடிகர் விவேக்கின் ரசிகர்கள் பலரும் கையில் மரக்கன்றுகளை ஏந்தியபடி பங்கேற்றனர். ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற ஆசையுடன் செயல்பட்டு வந்த விவேக் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios