The producers association chairman Vishal said that films are not flown in Tamilnadu and all the films are not like Baku.

தமிழகத்தில் திரைப்படங்கள் கொடிகட்டி பறக்கவில்லை எனவும், அனைத்து படங்களும் பாகுபலி போல் இல்லை எனவும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். 

டிக்கெட் விலையோடு சேர்த்து 18% ஜிஎஸ்டி வரியும் சேர்ந்ததால் டிக்கட்கள் விலை மிகவும் உயர்ந்தது. 
இதானால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வருவது குறையும் எனவும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தினர். 

இந்நிலையில், தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி கடந்த 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 30% சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழி படங்களுக்கு 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், அதிக வரி விதிப்பால் தயாரிப்பாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியுடன் உள்ளூர் வரியும் வசூலிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருட்டு விசிடியை ஒழித்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும் எனவும், ஏற்கனவே அதிக வட்டிக்கு வாங்கி படம் எடுப்பதால் தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். 

கேளிக்கை வரி வேண்டாம் என அரசிடம் வலியுறுத்தினோம் என்றும் அதனால் கேளிக்கை வரியை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் திரைப்படங்கள் கொடிகட்டி பறக்கவில்லை எனவும், அனைத்து படங்களும் பாகுபலி போல் இல்லை எனவும் விஷால் தெரிவித்தார்.