எம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு மெல்ல ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு ராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஜீ.கே.தர்மராஜன் நேற்று காலமானார்.

 தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர்.

கவிஞர் வாலியையும் பிரபல ஒளிப்பதிவாளர் மாருதிராவையும் இணைத்து " வடைமாலை " என்ற படத்தின் மூலம் "மாருதி -வாலி " என்று இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியவர். எம்.எல்.விசுவநாதன் இசையில் பாலமுரளி கிருஷ்னாவின் குரலில் "
 கேட்டேன் கண்ணனின்  கீதோபதேசம் " என்ற பாடல் இன்றளவும் பேமஸ்.


எமர்ஜென்சி காலத்தில் வந்த படம் தான் சிவாஜி கணேசன். வாணிஸ்ரீ நடித்த "இளைய தலைமுறை " என்ற படம், 

"இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை"
என்று எம்.எஸ். விசுவநாதன் கணீரென்று பாடிய படம் தான் "அக்கரை பச்சை '

.

 எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு ஒதுங்கவிருந்த சமயம், அப்போதுதான் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தார் இளையராஜா. அப்போது தயாரிப்பாளர் தர்மராஜன் எம்ஜிஆரை  கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து இளையராஜாவை இனசயமைப்பாளராகவும், கவிஞர் வாலி கதை திரைக்கதை வசனம் பாடல்கள எழுத மாருதி ராவ் ஒளிப்பதிவை கவனிக்க  கே.சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக படத்துவக்க விழாவை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்தினார். நாஞ்சில் மனோகரன் தலைமை தாங்கினார் முதல்வரான எம்.ஜி.ஆரும். துவக்க விழாவில் கலந்து கொண்டார் ஆனால் அந்த படம் சூட்டிங் நடக்கவில்லை.
டி.எம்.செளந்தாராஜன்
பி.பி. சீனிவாஸ்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மலேசியா வாசுதேவன் -
முதலானோர் பாடினர் ஏராளமான செலவு செய்து அமர்க்களப்படுத்திய
ஜி.கே.தர்மராஜன் அதன் பிறகு சினிமா பக்கமே வாவில்லை.
41 வருடங்கள் கழித்து .நேற்று (22.819) அன்று  காலமானார்.