The plastic flower blonde bomb has been mixed with everyone else

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள அனைவரும், பிரபலமாக இருந்தாலும், நடனம், காமெடி, பாடி பில்டிங், பாடல் எழுதுதல், மாடலிங் என தனி தனி துறையில் சாதித்தவர்கள். அப்படி பட்ட அனைவரும் தற்போது எங்கும் வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டவர்கள் இப்போது என்ன உணவு கிடைக்கிறதோ அதை தான் உண்ணுகின்றனர்.

இந்நிலையில் பிளாஸ்டிக் பூ அழகி குண்டு ஆர்த்தி எல்லோரையும் கலாய்த்துள்ளார். அதில் முதலாவதாக கஞ்சா கருப்பு 100 நாட்களுக்கு பிறகு எப்போது தியானம் செய்து கொண்டிருப்பார் என்றும் பாடி பில்டரும் நடிகருமான கணேஷ் வெங்கட் ராம் இங்கிருந்து செல்லும்போது மிகவும் குண்டாகி, பெரிய தொப்பையோடு போவார் என்றும் கலாய்த்தார்.

இதனை தொடர்ந்து ஆரவ், ஏய் குழந்தை அழுகிறது அமைதியா இரு என அனைவருக்கும் ஆர்டர் போடுவார் என்றும் காயத்திரி ரகுராம் ஏய் எல்லாரும் அமைதியா இருங்க என கத்திக்கொண்டு இருப்பர் என்றும் கூறினார். அதே போல தமிழ் கவிஞர் ஆன சினேகன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுபவராக மாறிவிடுவார் என அனைவரையும் செமையாக கலாய்த்து தள்ளிவிட்டார்.

இப்படி அனைவர்க்கும் கமெண்ட் கொடுத்த ஆர்த்தி, 100 நாள் முடிவில் எப்படி இருப்பார் என்று உங்களுக்கு தோணுது... உங்க கருத கிழே கமெண்ட் பண்ணுங்க...