The picture of the forgotten village life Pakka
மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக “பக்கா” படம் இருக்கும் என்று அதன் கதாநாயகன் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
தற்போது விக்ரம் பிரபு “பக்கா” என்றப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி, பிந்துமாதவி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களைத் தவிர சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
“அதிபர்’ படத்தைத் தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் இந்தப் படத்தை தயாரிப்பதோடு, படத்திலும் நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.
எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை எஸ்.எஸ்.சூர்யா இயக்குகிறார்.
இந்தப் படம் பற்றி விக்ரம் பிரபு, “இப்படத்தில் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். படத்தில் தோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு வெறியன். மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும்” என்று தெரிவித்தார்.
