The next year vishal making thupparivalan 2

விஷால் நடித்து வெளிவந்த 'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பாண்டியநாடு வெற்றிப் பெற்றதற்கு பாரதிராஜாவின் பங்கும் பெரிது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்பின் அவர் நடித்து வெளிவந்த 'நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி, மருது, கத்திச் சண்டை' ஆகிய ஏழு படங்களில் சில படங்கள் சுமார். சில படங்கள் மோசம்.

நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என அந்தப் பதவிகளுக்காகவும் அவர் ஓடியதாலோ என்னவோ நல்ல கதைகளைத் தேர்வு செய்ய முடியவில்லை பொலும்.

ஆனால், சமீபத்தில் வந்த 'துப்பறிவாளன்' படம் அவருடைய மார்க்கெட்டை முற்றிலும் செயலிக்காமல் காப்பாற்றிவிட்டது.

துப்பறிவாளன் படத்தை வாங்கியவர்களுக்கு ஓரளவிற்கு லாபத்தையும் கொடுத்துள்ளது. மேலும், 'துப்பறிவாளன்' படம் 'டிடெக்டிவ்' என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் நல்ல விமர்சனத்துடன் லாபத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த நிலையில், 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டே ஆரம்பித்துவிட விஷால் திட்டமிட்டுள்ளாராம். இது பற்றி விஷாலே பேசியுள்ளார்.

அவர் தற்போது 'இரும்புத் திரை, சண்டக் கோழி 2' ஆகிய படங்களில நடித்து வருகிறார். இதில் 'இரும்புத் திரை' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கோடை விடுமுறையில் 'சண்டக் கோழி 2' படம் வந்துவிடும். அதன்பின்பு 'துப்பறிவாளன் 2' படத்தை விஷால் ஆரம்பிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.