The name of the new director is produced in the name of the porn site ....

"எக்ஸ் வீடியோஸ்" என்ற ஆபாச இணையதளம் பெயரில் படம் ஒன்றை தயாரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர்.

சஜோ சுந்தர் என்பவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ஆபாச இனையதளத்தின் பெயரை வைத்துள்ளாராம்.

படத்திற்கு ஆபாச இணையதளத்தின் பெயரை வைத்ததற்கும் படத்துக்கும் நிறைய சம்மந்தம் உண்டு என்கிறார் இயக்குநர்.

ஆம், படத்தில் சொல்லப்பட்ட கருத்து என்ன தெரியுமா? ஆபாசப் படங்களே வேண்டாம் என்பது தான்.

லர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘எக்ஸ் வீடியோஸ் ‘.

“எத்தனையோ ஆபாசப் படங்களைப் பார்க்கிறோம். நமக்குத் தெரிந்த ஒருவர் அந்த வீடியோவில் இருந்தால் எப்படி இருக்கும்? அதன் பாதிப்பில்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன்” என்றார் சஜோ சுந்தர்.

மேலும், இப்படத்தின் மூலம் வரும் பணத்தை அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கழிப்பறை கட்டித் தரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் படத்தை தமிழிலும் இந்தியிலும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.