The movie aval saw three times the amount of money spent...
சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடித்த "அவள்" திரைப்படம் படம் எடுக்க போட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபம் பார்த்துள்ளதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மிலிண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுமன் ஆகியோர் பலர் நடித்துள்ள படம் அவள்.
கடந்த 3-ஆம் தேதி வெளியான திகில் நிறைந்த இப்படம் ரசிகர்களிடையே பலமான வரவேற்பு பெற்றது.
உண்மைக் கதையை பின்னணியாகக் கொண்டு இப்படத்தை நடிகர் சித்தார்த் தயாரித்தார். நீண்ட காலமாக ஒரு மாபெரும் ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருந்த சித்தார்த்துக்கு தான் நடித்து, தயாரித்த அவள் படத்திலேயே அந்த ஹிட் கிடைத்தது டபுள் ஹாப்பி.
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியான இப்படம் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம்.
இப்படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும்போது இப்படத்திற்கு மூன்று மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்று அதன் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
