The most anticipated Indian films are Mersal First
அட்லி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் படம் மெர்சல்.
மூன்று வேடங்களில் கலக்க வரும் விஜய்க்கு காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று நாயகிகள் ஜோடி சேர்ந்துள்ளனர்.
பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுத்தில் உருவாகியுள்ளது.
விஜய் உடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், சத்யன் என பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து, சிங்கிள் டிராக் டீசர், இசை வெளியீட்டு விழா என்று இப்படம் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், மெர்சல் படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இதையடுத்து, நாளை (வியாழன்) இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு மெர்சல் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.
மேலும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டரில், மிகவும் எதிர்பார்கக்ப்பட்ட இந்தியப் படங்களில் மெர்சல் தற்போது வரையில் முதலிடம் பிடித்துள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட் படம் ஜூட்வா 2, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், சஞ்சய் தத்தின் பூமி, ஆமிர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவ குஷா ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
