சரவணன் அண்ணாட்சி நடிப்பில் வெளியாக உள்ள லெஜண்ட் சரவணன் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்ட்டுள்ளது.

நாயகனான அண்ணாச்சி :

பிரபல சரவணா செல்வரத்தினம் கடையின் முதலாளியும், தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் அருண் நாயகனாக களமிறங்கியுள்ளார். தனது கடையின் விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னா என டாப் ஹீரோயின்ஸ் உடன் நடித்து விமர்சங்களை பெற்றிருந்தார். இருந்தும் தனது மனா உறுதியை விடாத அருண் தன சொந்த செலவில் தி லெஜண்ட் என்னும் படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார்.

சினிமாவில் கால் ஊன்றிய அண்ணாச்சி :

விளம்பரங்களில் அசத்தி வந்த அண்ணாச்சி, இப்போ சினிமாவிலும் கால் பதித்து விட்டார். அவர் நடிக்கும் முதல் படத்திற்கு ஜேடி மற்றும் ஜெர்ரி என இருவர் இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியூர் நாயகிகள் :

விளம்பரத்தில் நம்மூர் நாயகிகள் நடித்ததன் காரணமாக அவர்களது மார்க்கெட் குறைந்து விட்டதாக பேசப்படுகிறது. இதன் காரணமாக முன்னணி நாயகிகள் பலர் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டனராம். இதையடுத்து பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நாயகியாக களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் பிரபு, ரோபோ சங்கர், விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

பர்ஸ்ட் லுக் வைரல் :

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'தி லெஜண்ட்' கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பில் உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

முதல் சிங்கிள் ரிலீஸ் டேட் : 

இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி தி லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.