தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'மாஸ்டர்' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 'மாஸ்டர்' படப்பிடிப்பு நடைப்பெறும் தளத்திற்கு, வருமானவரித்துறையினர் நேரடியாக சென்று நடிகர் விஜய்க்கு சம்மன் வழங்கி, அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இன்று காலை, ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியா, நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்த 'பிகில்' படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனால் நடிகர் விஜய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளதாக கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் வருமானவரி துறை அதிகரிகம் 'மாஸ்டர்' பட செட்டுக்குள் நுழைந்ததால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.