அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆரம்பமே அபசகுனமாக ஒரு நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

விவேகம் படம் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வெளியானதை அடுத்து, ஒன்றரை ஆண்டுகள் கழித்து அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கோலாகலமாக திருவிழாவை போன்று கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பேட்ட இப்படத்துடன் மோதுவதால் மேலும் எதிர்ப்பார்பை தூண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் போஸ்டர், பேனர், கட்-அவுட்களை வைத்து அஜித், ரஜினி ரசிகர்கள் கலக்கி வருகின்றனர். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா தியேட்டரில் பாலாபிஷேகம் செய்வதற்காக ஏறிய போது சினிமா பேனர் சரிந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.