Asianet News TamilAsianet News Tamil

எச்சரிக்கை...சமூக வலைத்தளத்தில் பெண்களை தவறாக சித்தரித்தால் உடனடி தண்டனை..! ஆதரவு தெரிவித்த சமந்தா..!

சமூக வலைதளம் நமக்கு எந்த அளவிற்கு உதவியாக உள்ளதோ,  அதைவிட அதிக அளவில் அதன்மூலம் பல தவறுகளும் அரங்கேறி வருகிறது.  ஸ்மார்ட் போன் நம் உள்ளங்கையில் இருந்தால், இந்த உலகத்தையே கையில் அடக்க முடியும்.  அந்த அளவிற்கு இன்டர்நெட்டில் பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
 
The Hyderabad police have encouraged celebrities and women  abusers promising immediate action
Author
Chennai, First Published Dec 5, 2019, 6:05 PM IST

சமூக வலைதளம் நமக்கு எந்த அளவிற்கு உதவியாக உள்ளதோ,  அதைவிட அதிக அளவில் அதன்மூலம் பல தவறுகளும் அரங்கேறி வருகிறது.  ஸ்மார்ட் போன் நம் உள்ளங்கையில் இருந்தால், இந்த உலகத்தையே கையில் அடக்க முடியும்.  அந்த அளவிற்கு இன்டர்நெட்டில் பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அதேநேரத்தில், பெண்களுக்கு எதிரான பல அநீதிகளும் இதன் மூலம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சாதாரண பெண்கள் மற்றும் நடிகைகள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவது, தவறாக சித்தரிப்பது, பழி வாங்க சில ஆண்கள் இது போன்ற தீய வழிமுறைகளை கையாண்டு எளிதில் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். 

The Hyderabad police have encouraged celebrities and women  abusers promising immediate action

இப்படி பட்ட தவறுகளை தண்டிக்கும் விதமாக ஹைதராபாத் போலீஸ் பெண்கள் மற்றும் பிரபலங்களுக்கு எதிராக, அவர்களை தவறாக சித்தரித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கு நடிகை சமந்தா தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வரும் சமந்தா தற்போது ஹைதராபாத் போலீஸ் கூறியுள்ளதை ரீட்விட் செய்துள்ளார்.  

The Hyderabad police have encouraged celebrities and women  abusers promising immediate action

தற்போது சமந்தா தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற '96 'படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios