The history of the historical hero is portrayed Rajkumar Rao plays Subhash Chandra Bose

சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு படத்தில் சுபாஷ் சந்திர போஸாக நடிகர் ராஜ் குமார் ராவ் நடிக்கிறார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் படம் ஒன்று உருவாகிறது.

இதில் சுபாஷ் சந்திர போஸ் வேடத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இருக்கிறார். இதற்காக தனது தலையையும் மொட்டை அடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து ராஜ்குமார் ராவ் கூறியுள்ளதாவது...

“நான் சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை படத்தில் நடிக்கிறேன். இதற்காக அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு வருகிறேன். அவர் மட்டுமல்லாது சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியும் படித்து வருகிறேன். இந்த ரோலுக்காக இன்னும் சில தினங்களில் எனது தலையை பாதியளவு மொட்டையடிக்க உள்ளேன்” என்றுக் கூறினார்.