The history of the Andhra CM Do you know who plays in the role of his wife?
ஆந்திர முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் அடத்தில் அவரது மனைவி இலட்சுமி பார்வதியின் கதாபாத்திரத்தில் நடிகை ராய் லட்சுமி நடிக்க இருக்கிறார்.
பிரபல நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகின்றனர்.
இந்தப் படத்தை கேதி ரெட்டி ஜெகதீஸ்வர் எடுக்கிறார். மேலும், இந்தப் படத்திற்கு ‘இலட்சுமியின் வீர்கிராந்தம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் இலட்சுமி பார்வதியாக நடிகை ராய் லட்சுமி நடிக்க இருக்கிறாராம். ஆனால் ராய் லட்சுமி இதை மறுப்பது போன்று ஆச்சர்யத்துடன் கூடிய எமோஜியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் ராய் லட்சுமி நடிப்பது இன்னும் அதிகாரப்பூர்வாக உறுதியாகவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் ‘பார்வதியின் என்டிஆர்’ என்ற பெயரில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்தப் படத்தில் கதாநாயகனாக பாலகிருஷ்ணா நடித்து, தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
